உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கமுதி : கமுதி அருகே கோட்டைமேட்டில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் ஜேன்கிறிஸ்டி பாய் முன்னிலை வகித்தார். நாராயணபுரம் ஊராட்சி துணை தலைவர் வேல்மயில் முருகன் வரவேற்றார். நாராயணபுரம், இடையங்குளம், செங்கப்படை, புதுக்கோட்டை, பசும்பொன் ஊராட்சி மக்கள் பங்கேற்றனர்.​மகளிர் உரிமைத்தொகை, பட்டா திருத்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 352 மனுக்கள் பெறப்பட்டனர்.பி.டி.ஓ.,க்கள் கோட்டைராஜ், தாசில்தார் காதர்முகைதீன், ஊராட்சி தலைவர்கள் புதுக்கோட்டை வீரபாண்டி, பசும்பொன் ராமகிருஷ்ணன், இடையங்குளம் தங்கம்,செங்கப்படை ராமு பங்கேற்றனர். ஊராட்சி செயலர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை