உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கீழக்கரையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கீழக்கரை : கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான குழந்தைகள்பாதுகாப்பு கூட்டம் நடந்தது.நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) அருள் தலைமை வகித்தார். குழந்தைகள் நல உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் ஹமீது சுல்தான், கைராத்துல் ஜாலியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, வருவாய் அலுவலர் வித்யா, குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் சித்ரா உள்ளிட்ட துறை அலுவலர்கள், மகளிர் போலீசார் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களை கண்காணித்தல், குழந்தை திருமணம், ஆதரவற்ற குழந்தைகளை கண்காணித்தல், சட்டப்படி குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்ளுதல், போக்சோ சட்டம் உள்ளிட்ட விதிமுறைகள் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை