மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
5 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
5 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
5 hour(s) ago
சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புராதான சிறப்பும் பெற்ற பவள நிறவல்லி, பூவேந்திய நாதர் கோயில் சித்ரா பவுர்ணமி விழா ஏப்.14ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.வருண பகவானால் பூஜிக்கப்பட்ட இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருக்கல்யாண உற்ஸவத்திற்கு முன்பாக மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் சிவபெருமான் வேடமணிந்த சிவாச்சாரியார் வலையை வீசி தொல்லை தரும் சுறா மீனை வெல்வார். பின்னர் சுறா மீனுக்கு சாப விமோட்சணம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மாரியூர் கோயில் பேஸ்கார் சீனிவாசன் கூறியதாவது: திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமானின் 57வது படலமாக வலை வீசிய நிகழ்வு இப்பகுதியில் நடந்ததாக புராணங்கள் நமக்கு உணர்த்துகின்றன. வேத ஆகமங்களின் அதி ரகசியங்களை ஈஸ்வரன், ஈஸ்வரிக்கு உபதேசத்தை அருளினார். அது சமயம் தேவியார் விருப்பமின்றி வேறு கவனத்தோடு கேட்டார். இதனை கண்ட ஈஸ்வரன் கோபமுற்று நீ மீனவ குடும்பத்தில் மீனவ பெண்ணாக வளரக் கடவாய் என சாபமிட்டார். இந்த சாப விமோசனத்திற்கு ஏதாவது பரிகாரம் கேட்டதற்கு நீ மீனவ பெண்ணாக வளர்ந்து மங்கை பருவம் அடையும் தருவாயில் நான் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என திருவாய் அருளினார். அதே வேளையில் இறைவனின் சாபத்தால் சுறா மீனாக திரிந்த நந்தி தேவர் அப்பகுதி மீனவர்களுக்கு பெருந் துன்பம் விளைவித்து வந்தார். இதனால் மனம் வருந்திய மீனவர்கள் மீனவ தலைவனிடம் முறையிட்டனர். யார் இந்த சுறா மீனை அடக்கி கரை சேர்க்கிறார்களோ, அவர்களுக்கு என் மகளை திருமணம் செய்து தருகிறேன் என்று அறிவித்தார். ஈஸ்வரியை மணமுடிக்க தக்க தருணம் என கருதிய சிவபெருமான் மீனவர் வேடம் பூண்டு சுறா மீனை அடக்கி கரை சேர்த்து சாப விமோசனம் அளித்தார். இந்த லீலையை மையமாக வைத்து மாரியூர் கடலில் வலை வீசும் படலம் காட்சி ஏப்.23 (செவ்வாய்) சித்ரா பவுர்ணமி அன்று காலை 7:00 மணிக்கும் திருக்கல்யாணம் காலை 10:30 மணிக்கு நடக்கிறது என்றார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago