மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., சங்க வட்ட கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு
22-Feb-2025
ஆர்.எஸ்.மங்கலம் : மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் அடுக்கம் திட்டத்தில் விவசாயிகள் தங்களது நில விவரங்களுடன், நில உடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விவரம் கண்டறியும் வகையில் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அடக்கம் திட்டத்தில், மார்ச் 1 முதல் விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கிராமங்கள் வாரியாக வேளாண் துறை அலுவலர்களும், பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொது சேவை மையங்கள் மூலமாகவும் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட கவ்வூர், பாரனுர் பகுதிகளில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் விவசாயிகளுக்கு அடுக்கம் திட்டத்தில் பதிவு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உதவினர்.
22-Feb-2025