மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவில் மண்டல பூஜை
02-Sep-2024
ரெகுநாதபுரம் : -ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் இரண்டாவது பிரதிஷ்டை தின விழா கொண்டாடப்பட்டது.ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2017ல் சபரிமலை தலைமை நம்பூதிரி ராஜீவரு கண்டவருவால் 2வது பிரதிஷ்டை நடந்தது. அதன் 7ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மூலவர் வல்லபை ஐயப்பன், விநாயகர், மஞ்சமாதா, சங்கரன் சங்கரி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபிஷேகம், பஞ்சமுக தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார்.
02-Sep-2024