மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
9 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
9 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
9 hour(s) ago
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அக்ரஹாரம் வீதியை சேர்ந்தவர் வீரபாகு 51. பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவரை 2018 மார்ச் 29ல் ஆட்டோவில் அழைத்துச் சென்ற மர்மநபர்கள் 5 பேர் பேராவூர் மெயின் ரோட்டில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஆனால் யாரையும் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன் வீரபாகு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க மனு தாக்கல் செய்தார்.நீதிமன்றம் உத்தரவில் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கினர்.வீரபாகு கூறுகையில் ''என்னை கொலை செய்ய முயன்ற 5 பேரை கண்டுபிடிக்காமல் போலீசார் தாமதம் செய்தனர். சி.பி.சி.ஐ.டி., விசாரணையிலாவது குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என்றார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago