உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூறாவளி காற்றால் சாய்ந்தன மரங்கள் மின் கம்பங்கள், தச்சு பட்டறை சேதம்

சூறாவளி காற்றால் சாய்ந்தன மரங்கள் மின் கம்பங்கள், தச்சு பட்டறை சேதம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஆலமரம் சாயந்ததில் இரண்டு தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன.ராமநாதபுரத்தில் நேற்று காலை முதல் வெயில் வாட்டியது. மாலை 4:00 மணிக்கு சூறை காற்றுடன் மிதமான மழை பெய்தது. அப்போது காளிகாதேவி ஊருணி அருகேவுள்ள தொழிற்பேட்டையில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேருடன் சாய்ந்தது. இதில் தச்சு பட்டறைகள் நொறுங்கி தரைமட்டமாகின. மரங்கள் விழுந்ததால் 5 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்தன.நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் தச்சு பட்டறைகளில் மதியம் 2:00 மணிக்கு பணி முடித்து தொழிலாளர்கள் சென்றனர். அப்பகுதியில் யாரும் இல்லாததாலும் மின் கம்பம் முறிந்தவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் அதிர்ஷ்ட வசமாக அனைவரும் தப்பினர். அப்பகுதியில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.ராமநாதபுரம் அரண்மனை வடக்குத்தெருவில் இருந்த வேப்ப மரமும், மாடக்கொட்டானில் ஒரு மரமும் வேருடன் சாய்ந்தன. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த மரங்களை வெட்டி அகற்றினர். மின் வாரியத்தினர் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தச்சுபட்டறை உரிமையாளர் செந்தில் கூறியதாவது:மரம் விழுந்து பட்டறையில் இருந்த இயந்திரங்கள் சேதமடைந்துவிட்டன. அருகில் உள்ள பாண்டி கார் மெக்கானிக் ெஷட்டும் சேதமடைந்து தரைமட்டமானது. சேதம் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை