சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் சரக்கு வாகனத்தில் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட சிறுதானியங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது ஒருசில கிராமங்களில் பருத்தி பறித்து வருகின்றனர். முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களில் பருத்தி பறிமுதல் செய்து சரக்கு வாகனங்களில் விற்பனைக்காக முதுகுளத்துார் கொண்டு வருகின்றனர்.முதுகுளத்துார் தேரிரு வேலி விலக்கு ரோடு அருகே சரக்கு வாகனத்தில் அதிக பாரத்துடன் பருத்தி மூடைகள் ஏற்றி ஆபத்தான முறையில் இளைஞர்கள் அமர்ந்து பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து போலீசார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.