| ADDED : மே 19, 2024 11:23 PM
திருவாடானை: திருவாடானை ஒன்றிய ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்தார். திருவாடானை சமத்துவபுரம் நரிக்குறவர் காலனியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 15 வீடுகள் கட்டுதல், கருமொழி ஊராட்சியில் ரூ.7.70 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு ரூ.28.60 லட்சம் செலவில் அரசு தொடக்கப்பள்ளி கட்டடம் மற்றும் சமையலறை பணிகளை பார்வையிட்டார்.டி.நாகனி ஊராட்சியில் ஏ.ஜி.ஏ.எம்.டி., திட்டத்தில் ஆதியாகுடி ஊரணியில் படித்துரை கட்டுதல், நபார்டு திட்டத்தில் தேவகோட்டை-வட்டாணம் விருசுழி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுதல், பழங்குளம் ஊராட்சியில் மணிமுத்தாறில் பாலம் கட்டுதல், கூகுடி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சாலை மேம்படுத்துதல், அரசு தொடக்கபள்ளியில் கூடுதல் வகுப்பறை பணிகளை பார்வையிட்டார். பி.டி.ஓ.,க்கள் கணேசன், சந்திரமோகன், ஊராட்சி தலைவர்கள் திருவாடானை இலக்கியா, கருமொழி முத்துராமலிங்கம், கூகுடி சரவணன், நாகனி இந்திரா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.