தரணி முருகேசன் இல்லத்திருமண விழா
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த தரணி முருகேசன் இல்லத்திருமண விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.ராமநாதபுரம் தனியார் மகாலில் முன்னாள் பா.ஜ., மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், சின்னபாளையரேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாக்கியவதி தம்பதியின் மகன் ஆர்.எம்.நித்யாதரனுக்கும். மறைந்த செய்தி மக்கள் தொடர்புத்துறை புகைப்படக்கலைஞர் சங்கர்,-ராஜேஸ்வரி தம்பதியரின் மகள் எஸ்.கீர்த்திஸ்ரீக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து பா.ஜ., மாநில அண்ணாமலை வாழ்த்தினார். பின் தமிழக கவர்னர் ரவி வாழ்த்தினார். மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன்.பாலகணபதி, தென்னை வாரிய தலைவர் சுப.நாகராஜன், முன்னாள் மாநில துணைத்தலைவர் குப்புராமு, மாவட்டத்தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன், முன்னாள் நகர் செயலாளர் கார்த்திகேயன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.