மேலும் செய்திகள்
சிவராத்திரி விழா
28-Feb-2025
பரமக்குடி: பரமக்குடியில் தி.மு.க., வினர் பஸ் ஸ்டாண்ட் முன்பு பா.ஜ., மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் தலைமை விகித்தார். நகராட்சி தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தார். அப்போது மத்திய ஆட்சியாளர்களின் அடக்குமுறையின் உச்சமாக பார்லிமென்டில் தமிழ்நாட்டின் தி.மு.க., எம்.பி., க்களை அநாகரிகமாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டிக்கிறோம் என பேசினர்.இதில் போகலுார் ஒன்றிய செயலாளர் குணசேகரன், நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
28-Feb-2025