உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

கீழக்கரையில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

கீழக்கரை: -கீழக்கரை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்க கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.கீழக்கரை நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் துாய்மை பணியாளர்களை கொண்டு நகராட்சியில் உள்ள குப்பை கழிவுகள் அகற்றும் பணி நடக்கிறது.கடந்த இரு மாதங்களாக துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் தரவில்லை. இதையடுத்து நகராட்சி அலுவலகம் முன்பு துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரில் துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு குப்பை குவிந்துள்ளது. எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் துாய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதம் ரூ. 13 லட்சம், இம்மாதம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வரவு வைக்கப்படாததே பிரச்னைக்கு காரணமாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை