கண்தான வார விழா விழிப்புணர்வு
ராமநாதபுரம், - -ராமநாதபுரம் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை இணைந்து கண்தான இருவார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் முன்னிலை வகித்தார். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷமிட்டபடி ஊர்வலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை வந்தடைந்தது.எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை பொறுப்பு பேராசிரியர் டாக்டர் கணேஷ்பாபு, கண் மருத்துவத்துறை நிபுணர்கள் டாக்டர்கள் ராஜா, ஹரிக்குமார், சீமா, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமைன கண்காணிப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நிலைய மருத்து அலுவலர் மனோஜ்குமார் பங்கேற்றனர்.