உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் விவசாயம் அறுவடை செய்யப்பட்டதை தொடர்ந்து, விவசாயிகள் கோடை சாகுபடியாக சிறு தானியங்கள் மற்றும் பருத்தி சாகுபடி செய்வதில் தற்போது ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் மற்றும் அதன் கீழ் உள்ள சிறிய கண்மாய்களில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி, விவசாயிகள் கோடை சாகுபடி செய்வதில் ஆர்வம் செலுத்துகின்றனர். குறிப்பாக, ஆர்.எஸ். மங்கலம், பிச்சனார் கோட்டை, இருதயபுரம், நெடும்புளிக் கோட்டை, மங்கலம், ராமநாதமடை, புல்லமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பருத்தி விதை நடவு செய்யும்படியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். பருத்தி விவசாயத்தைப் பொறுத்தளவில், லேசான ஈரப்பதத்திலும்வறட்சியிலும், அதிக மகசூல் கொடுக்கும் என்பதால், விவசாயிகள் கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதுகுறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி