பிப்.28ல் உண்ணாவிரதம்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று இரவு மீனவர்களின் கூட்டம் நடந்தது.இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி பிப்.,28ல் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.