இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் நோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார டாக்டர் நிவேதிதா தலைமை வகித்தார். டாக்டர் பவித்ரா வர்ஷினி முன்னிலை வகித்தார். முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட காச நோயாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் ஊக்கத்தொகை ரூ.500 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிலதிபர் டத்தோ சரவணன், முன்னாள் இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணி, சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, ஜெயச்சந்திரன், சேதுபதி உட்பட சுகாதாரப் பார்வையாளர், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காசநோய் மேற்பார்வையாளர் பிரவீன் ஆனந்த் செய்தார். ––