உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பதிவு எண் இல்லாத டூவீலரில் மதுபாட்டில் கடத்தும் கும்பல்

பதிவு எண் இல்லாத டூவீலரில் மதுபாட்டில் கடத்தும் கும்பல்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் கள்ளதனமாக மதுபாட்டில் விற்கும் ஏஜன்ட்கள் பதிவு எண் இல்லாத டூவீலரில் டோர் டெலிவரி செய்வதால் போலீசார் திணறுகின்றனர்.புனித நகரான ராமேஸ்வரத்தில் 2017 முதல் தமிழக அரசு மதுபான கடையை அகற்றியது. இங்கிருந்து 11 கி.மீ.,ல் உள்ள பாம்பன் ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனால்ராமேஸ்வரம் மதுபிரியர்கள் பாம்பன் சென்று வந்தனர். காலப்போக்கில் சிலர் பாம்பனில் மது பாட்டில்களை வாங்கி வந்து கள்ளத்தனமாக கூடுதல்விலைக்கு ராமேஸ்வரத்தில் விற்றனர். தற்போது புற்றீசலாய் 150க்கு மேற்பட்ட மது கடத்தல் ஏஜன்ட்கள் உருவாகி மதுபாட்டில் விற்பனை படுஜோராக நடக்கிறது.இதனை தடுக்க போலீசார் மது ஏஜன்ட்களிடம் மது பாட்டிலுடன் டூவீலரையும் பறிமுதல் செய்தனர். இதனால் பல ஆயிரம் ரூபாய் மதிப்புஉள்ள டூவீலர்கள் சிக்கியதால் மது ஏஜன்ட்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் சுதாரித்த ஏஜன்ட்கள் பதிவு எண், இன்சூரன்ஸ் இல்லாத பழைய போலி டூவீலர்களை வாங்கி மதுபாட்டில்களை தடையின்றி மதுபிரியர்கள் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்கின்றனர். இந்த போலி டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தாலும் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியவில்லை. இந்த போலி டூவீலரை பறிகொடுத்த மது ஏஜன்ட்கள் மீண்டும்வேறொரு போலி டூவீலரில் உலா வருகின்றனர். போலி டூவீலரை யார் சப்ளை செய்வது, எங்கிருந்து கடத்தி வருகின்றனர்என தெரியாத நிலையில், மது ஏஜன்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை