மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
11-Aug-2024
ராமநாதபுரம்: தேவிப்பட்டினம் அருகே இலந்தை கூட்டம் கிராமத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணர் கோயிலில் கும்பாபிேஷக விழா நடந்தது.ஆக.21ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி புனிதநீர் நிரம்பிய கும்ப கலசங்கங்கள் வைத்து 4 கால யாகசாலை பூஜைகள் நேற்று (ஆக.23) காலை 8:30 மணி வரை நடந்தது. அதன்பிறகு கும்ப கலசங்கள் புறப்படாகி காலை 9:23 மணிக்கு கோபுரகலசத்தில் புனிநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. மூலவர் பாமா,ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணருக்கு கும்பநீர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களில் அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் யாதவ மகாசபை மாநில பொதுச்செயலாளர் வேலுமனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ., மலேசியா பாண்டியன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் நாகேந்திரன், ராமநாதபுரம் தாலுகா யாதவ வர்த்தக சங்கத்தலைவர் பிரகலாதன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராம தலைவர் ஆனந்தன், ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்தினர்.
11-Aug-2024