அரசு பஸ் பழுது: போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம்; மதுரை ரோட்டில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பு அரசு பஸ் பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்துார் செல்லும் அரசு போக்குவரத்துக்கழக பஸ் நேற்று மதியம் 12:00 மணிக்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பு பழுதாகி நின்றது. ஏற்கனவே இப்பகுதியில் ரோடுகளில் இரு சக்கர வாகனங்களை வணிக நிறுவனங்கள் முன் நிறுத்தி ஆக்கிரமிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில் நெருக்கடியான இடத்தில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் வாகனங்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டனர். பணியாளர்கள் வந்து பஸ்சை சரி செய்து எடுத்து செல்லும் வரை அப்பகுதியில் ஆம்புலன்ஸ் உட்பட அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் தவித்தனர்.இது போன்ற நேரங்களில் பழுதான பஸ்சை நெரிசல் மிகுந்த ரோடுகளில் இருந்து முதலில் அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு சென்று பழுது நீக்கும் பணிகளை செய்ய வேண்டும். இதனை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்த வேண்டும்.