உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி விநாயகர் சிலைகள் ஊர்வலம்

ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி விநாயகர் சிலைகள் ஊர்வலம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நொச்சி ஊருணியில் விசர்ஜனம் செய்யப்பட்டது.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 348 இடங்களில் விநாயகர் சிலைகள் 5 அடி உயரத்தில் செப்.7 ல் பிரதிஷ்டை செய்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், பக்தர்கள் வழிபாடு செய்தனர். நேற்று (செப்.9 ல்) ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம், விசர்ஜனம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாயகூத்தன், மாநில பேச்சாளர்கள் ரத்தின சபாபதி, கங்காதரன், ஆர்.எஸ்.எஸ்., மாநிலத் தலைவர் ஆடல் அரசன் முன்னிலை வகித்தனர்.ராமநாதபுரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி உள்ளிட்ட இடங்களில் இருந்து 41 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வந்து வழிவிடு முருகன் கோயில் அருகே சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு விநாயகர் சிலைகள் நொச்சி ஊருணியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., நிர்வாகிகள், ஹிந்து அமைப்பினர் பலர் பங்கேற்றனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஹிந்து மக்கள் கட்சியினர் 22 விநாயகர் சிலைகளை கரைத்தனர். செப்.7ல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் திட்டக்குடி தெரு, ராமர் தீர்த்தம், மார்க்கெட் தெரு உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் விநாயகர் சிலைகள் வாகனத்தில் வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.இதன்பின் விநாயகர் சிலைகளுக்கு மகா தீபாராதனை நடத்தியதும், பக்தர்கள் கடலில் சிலைகளை கரைத்தனர்.* ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் நான்கு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்தனர். நேற்று மாலை 4:00 மணிக்கு 7 அடி உயர விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.வெட்டன்மனை, கல்பார், தொத்தமகன்வாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. தர்கா அலங்கார நுழைவு வாயில் அருகே விநாயகர் சிலைக்கு ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாகம் சார்பில் சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இங்குள்ள மாரியம்மன் கோயில்களில் நடக்கும் முளைப்பாரி உற்ஸவ விழாவில் கொண்டு செல்லக்கூடிய முளைப்பாரிகள் மற்றும் விநாயகர் சிலைகள் தர்கா நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.மாலை 6:00 மணிக்கு மேல் சின்னஏர்வாடி கடற்கரையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் விசர்ஜனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ