உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகப்பேறு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்

மகப்பேறு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே புதுக்கோவில், ஊருணிக்காரன் வலசையில் கர்ப்பிணிகள் வசதிக்காக அரசு மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.புதுக்கோவில் ஊருணிக்காரன் வலசையைச் சேர்ந்த மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், ஊருணிக்காரன் வலசையில் ஏற்கனவே இருந்து அரசு மகப்பேறு மருத்துவமனையை அகற்றி ஓராண்டிற்கு மேலாகியும் புதிதாக கட்டித்தரவில்லை. எங்கள் ஊர் கர்ப்பிணிகள் 20 கி.மீ.,ல் உள்ள காவனுார் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சென்று வர சிரமப்படுகிறோம்.எனவே ஊருணிக்காரன் வலசையில் மகப்பேறு மருத்துவமனை கட்டித்தர மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ