உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வலியுறுத்தல்

சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வலியுறுத்தல்

கமுதி: வாடகை கட்டடத்தில் அடிப்படை வசதியின்றி செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தை, அபிராமம் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய அலுவலகம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தியுள்ளது.கமுதி அருகே அகத்தார்இருப்பு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கிளை மாநாடு நடந்தது.மாவட்ட செயலாளர் காசிநாதத்துரை தலைமை வகித்தார். முன்னாள் கிளைச் செயலாளர் வீரையா கொடியேற்றி வைத்தார். முன்னாள் தாலுகா செயலாளர் முனியசாமி வரவேற்றார். கிளைச் செயலாளர் பொன்னுச்சாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். இதில் அபிராமம் பேரூராட்சியில் தற்போது வாடகை கட்டடத்தில் அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தை பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய அலுவலகம் அமைக்க வேண்டும். ஆடு, கோழி விற்பனை சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அபிராமத்தில் இருந்து உடையநாதபுரம் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகி ராஜபாண்டி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை