உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

முதுகுளத்துார்: முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் வட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். 2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தில் அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, முன்னாள் பரமக்குடி கல்வி மாவட்ட பொருளாளர் முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் முத்து முருகன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரமேஷ் கண்ணன், வட்டார செயலாளர் பிரபாகர் உட்பட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலும், பரமக்குடி, திருவாடானையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ