ரோட்டரி இதயம் காப்போம்: இலவச மருத்துவ முகாம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரோட்டரிகிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட், திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இதயம் காப்போம் இலவச மருத்துவ முகாம் ராமநாதபுரம் கேணிக்கரை வேலுமாணிக்கம் டைனிடாட்ஸ் பள்ளியில் நடந்தது.ரோட்ரி சங்கத் தலைவர்செங்குட்டுவன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட கவர்னர் தினேஷ்பாபு, துணை கவர்னர் டாக்டர் ரம்யா முன்னிலை வகித்தனர். ரோட்டரி முன்னாள் கவர்னர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா துவக்கி வைத்தார். இ.சி.ஜி., எக்கோ, பி.எம்.ஐ., ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. 175 பேர் பங்கேற்றனர். ரோட்டரி கவர்னர் தினேஷ்பாபு கூறியதாவது: ரோட்டரி குளோபல் கிரான்ட் திட்டத்தில் இதயம் நல்லெண்ணெய் நிறுவனம் சார்பில் முன்னாள் கவர்னர் முத்து அளித்த ரூ.45 லட்சம் பங்களிப்புடன் ரூ.1.10 கோடி மதிப்பில் இதய பரிசோதனைக்கான நவீன வாகனம் வாங்கப்பட்டு திருநெல்வேலி காவேரி மருத்துவமனை டாக்டர்கள் மூலம் இந்த மருத்துவ முகாம் நடக்கிறது என்றார். ஏற்பாடுகளை சங்க உறுப்பினர்கள் சுகுமார், டாக்டர் ராஜீவ், செயலாளர்அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.