உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாய் கரை பலம் இழப்பு

கண்மாய் கரை பலம் இழப்பு

சாயல்குடி: சாயல்குடி அருகே மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார் கண்மாய் கரைகளில் அதிகளவு சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் உள்ள கண்மாய் கரைப்பகுதிகளில் அடர்ந்து வளர்ந்துஉள்ள சீமைக் கருவேல மரங்களால் கண்மாய் கரைகளில் விரிசல் ஏற்பட்டு பலம் இழக்கிறது. கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளில் நீரை தேக்கி வைக்க இயலாதவாறு சீமைக் கருவேல மரங்களின் தாக்கம் அதிகளவு உள்ளது. இதனால் ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் மழை நீரை சேகரிக்க வழியின்றி உள்ளது. நீர் வழித்தட கால்வாய் பகுதிகள் முறையாக துார்வாரப்படாமல் பொலிவிழந்துள்ளது. எனவே பொதுப்பணித்துறை பாசன கண்மாய் அதிகாரிகள் சீமை கருவேல மரங்கள் நிறைந்த பகுதியை அழித்து முறையாக துார்வாரினால் மழைக் காலங்களில் நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ