உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை பள்ளிகளில் மேலாண்மை குழு தேர்வு 

திருவாடானை பள்ளிகளில் மேலாண்மை குழு தேர்வு 

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உள்ள 12 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு தேர்வு நடந்தது.பள்ளிகளில் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.முதல்கட்டமாக ஆக.,2ல், இரண்டாம் கட்டமாக ஆக.,10ல் மூன்றாம் கட்டமாக ஆக.,17ல் நடந்தது. நேற்று திருவாடானை தாலுகாவில் உள்ள 12 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கான மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்வு நடந்தது. ஆக.,31க்குள் தேர்வு பணிகள் முழுமையடையும் என கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ