உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு ஊடக பயிலரங்கு

மாணவர்களுக்கு ஊடக பயிலரங்கு

ராமநாதபுரம், : ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில் மாணவர்களுக்கு ஊடகப் பயிலரங்கம் நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் பயிலரங்கை துவக்கி வைத்தார். உதவிப்பேராசிரியர் பாலாஜி வரவேற்றார். தொடர்பியல் துறை தலைவர் கவுரிராஜன் ஊடகத்துறைகளின் பிரிவுகள், வேலை வாய்ப்புகள், மின்னணு ஊடங்களின் முக்கியத்துவத்தையும் விரிவாக எடுத்துரைத்தார். இதில் நவீன கேமராக்கள், விளம்பர துணுக்குகள், அச்சு கருத்து படங்கள், காட்சி ஒலிபரப்பு கருவிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி, செய்யது அம்மாள் அறக்கட்டளை டாக்டர் பாத்திமா சானாஸ் வாழ்த்து தெரிவித்தனர். கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா, மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ