உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை காத்திருப்போர் கூடம் அமைப்பு

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை காத்திருப்போர் கூடம் அமைப்பு

ராமநாதபுரம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வருபவர்கள், உள் நோயாளிகளின் உறவினர்கள் அமர்வதற்கான காத்திருப்போர் கூடம் அமைக்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. இதன் அருகில் இறந்தவர்களின் உறவினர்கள் கூடுவார்கள். இவர் மழை, வெயில் நேரங்களில் ஒதுங்க இடமின்றி தவித்தனர். இதே போல் உள் நோயாளிகளை பார்க்க வருவோர் உடன் இருப்போரும் சிரமப்பட்டனர்.இதையடுத்து காத்திருப்போர் கூடம் அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியிடப்பட்டது. குறிப்பாக பெண்கள் அமர்வதற்கு கூட இடம் இல்லாமல் தவித்தனர். செய்தி எதிரொலியாக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை அறைக்கு அருகில் உயிரிழந்தவரின்உறவினர்கள் அமர்வதற்காக காத்திருப்போர் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ