வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்பிடியே சிலைகளைக்.கரைச்சு இலங்கை வரை மேடுறுத்தி வீதி சமைச்சுடலாம்.
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி அன்று ராமேஸ்வரத்தில் முக்கிய இடங்களில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 25 விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடந்தது.நேற்று ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் இந்திராநகர், எம்.ஆர்.டி., நகர், பஸ் ஸ்டாண்ட், கரையூர் உள்ளிட்ட 25 இடங்களில் இருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக அக்னி தீர்த்த கடற்கரைக்கு எடுத்து வரப்பட்டன. விநாயகர் சிலைகளுக்கு தீபாராதனை முடிந்ததும் பக்தர்கள் அக்னி தீர்த்தத்தில் கரைத்தனர். தங்கச்சிமடம், பாம்பன், மண்டபத்திலும் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் கடல், நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
இப்பிடியே சிலைகளைக்.கரைச்சு இலங்கை வரை மேடுறுத்தி வீதி சமைச்சுடலாம்.