மேலும் செய்திகள்
தபால் அனுப்பி போராட்டம்
2 hour(s) ago
பீர் பாட்டிலில் பூச்சி இறகு
3 hour(s) ago
இரட்டை கோபுர கிறிஸ்துமஸ் கேக்
3 hour(s) ago
திருவாடானை : லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் பேரூராட்சி, ஊராட்சிகளில் மாதாந்திர கூட்டம் நடத்தும் பணிகளில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் எந்த புதிய பணிகளுக்கும் டெண்டர் விடவில்லை.நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அரசு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முழுமையாக செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.மாதாந்திர கூட்டம் நடத்தி அதில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் குறித்த பணிகளில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.தற்போது ஊராட்சிகளுக்கு 15வது நிதிக்குழு மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வேலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெண்டர் விடும் பணிகள் நடக்கும்.திருவாடானை ஊராட்சி ஒன்றியம், தொண்டி பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் அதற்கான பணிகள் மும்முரமாக நடக்கிறது.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago