முகூர்த்த நாள்- சதுர்த்தி விழா எதிரொலி பூ மாலை, வாழை இலை விலை உயர்வு
ராமநாதபுரம்: விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் முகூர்த்த நாள் காரணமாக வழக்கத்தை விட பூ மாலைகளின் விலை இரு மடங்கும், வாழை இலை கட்டு ரூ.800 ஆக விலை உயர்ந்தது.ராமநாதபுரம் சந்தைக்கு பூக்கள், வாழை இழை மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. தற்போது நகரை சுற்றியுள்ள கிராமங்களில் விநாயர் கோயில்களில் சதுர்த்தி விழா நடக்கிறது. நேற்று (செப்.6) நாளை (செப்.8) முகூர்த்த நாட்கள் என்பதால் ஏராளமான திருமணங்கள், காதணி விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கிறது.இதனால்வழக்கத்தைவிட பூக்கள், வாழை இலையின் தேவை அதிகரித்து அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.கடந்த வாரம் வாழை இலைக்கட்டு ரூ.600க்கு விற்றது ரூ.800 ஆகவும், ரூ.100 முதல் ரூ.200க்கு விற்ற ரோஜாப்பூ,சம்பங்கி உள்ளிட்ட பூமாலைகளின் விலையும் ரூ.200 முதல்ரூ.400 வரை விலை அதிகரித்துள்ளது. கதம்பம் ஒரு முழம் ரூ.15முதல் ரூ.20க்கு விற்கப்படுகிறது. இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.