மேலும் செய்திகள்
மாணவிகளுக்கான குறுவட்ட தடகளம்
31-Aug-2024
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குறுவட்ட ஆண்கள் தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் குறு வட்ட தடகளப்போட்டிகள் நடந்தது. இதில் ஆண்களுக்கான பிரிவில் நேஷனல் அகாடமி மாண்டிேஸாரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 23 தங்கப்பதக்கம், 11 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் பெற்றும் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். இப்பள்ளி மாணவர் விஷால் தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதித்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் செய்யது அப்துல்லா, கல்வி ஆலோசகர் சங்கரலிங்கம், பள்ளி முதல்வர் ராஜமுத்து, உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.
31-Aug-2024