தேசிய விளையாட்டு தினம் கொண்டாட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் தேசிய விளையாட்டு தினத்தை வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.மேஜர் தியான் சந்த் பிறந்தநாள் ஆக., 29ல் தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன்படி, நேற்றுமுன்தினம் ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் தேசிய விளையாட்டு தின விழா நடந்தது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாளர் ஜெக்தீஸ் பகான் சுதாகர் கேக் வெட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், பயிற்சியாளர் கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விடுதி மாணவர்கள் பங்கேற்றனர். கீழக்கரை
செய்யது ஹமீதா கலை- அறிவியல் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி சிறப்புரையாற்றினார். தேசிய விளையாட்டு தினம் தொடர்பாக நடந்த போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் செய்தார்.