நாட்டு நலப்பணித் திட்டம் முகாம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி நாட்டு நல பணித்திட்டத்தின் சார்பாக, பிப். 13 முதல் 19 வரை நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் புல்லங்குடி கிராமத்தில் நடந்தது.துவக்க விழாவிற்கு கல்லுாரி முதல்வர் உதயகுமார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் பி.டி.ஓ., முருகானந்தவள்ளி முன்னிலை வகித்தார். புல்லங்குடி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆர்த்தி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை யாசிரியர் எஸ்தர்வேணி, ஆசிரியர்கள், கல்லுாரி கண்காணிப்பாளர் ராஜகுமார், கட்டடவியல் துறை தலைவர் லாவண்யா, பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் விஜயராகவன் செய்திருந்தார்.