உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருங்கடல் பாதுகாப்பு கண்காட்சி

பெருங்கடல் பாதுகாப்பு கண்காட்சி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜூ அவுட்ரீச் அமைப்பு சார்பில், பெருங்கடல் பாதுகாப்பு கண்காட்சி நடந்தது. மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாணவர்களின் கடல் பாதுகாப்பு செயலாக்கங்களும் படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன. ஜூ அவுட்ரீச் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்வியாளர் மாரிமுத்து, ரகுநாத் ஆகியோர் கடல் பாதுகாப்பின் தேவை, முக்கியத்துவம் குறித்து விளக்கினர். கடல்சார் பாதுகாப்பு குறித்த காணொளிகள் திரையிடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் முத்துமாரி, ஆசிரியர்கள் ராஜா மணிகண்டன், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ