ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜாஸ் கல்வி நிறுவனம் சார்பில் பட்டணம்காத்தான் டி-பிளாக் ஏராகிட்ஸ் மழலைப் பள்ளியில் மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடினர். கல்வி நிறுவன தாளாளர் முகமது சலாவுதீன் தலைமை வகித்தார். மழலைகள், மாணவிகள் கேரள பாரம்பரிய ஆடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் லட்சேஸ்வரி, நிறைமதி, வெங்கடேஸ்வரி, ஷிபானா பர்வீன், சுபத்ரா பங்கேற்றனர்.