உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொலை முயற்சி வழக்கு மேலும் ஒருவர் கைது

கொலை முயற்சி வழக்கு மேலும் ஒருவர் கைது

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் சித்தார்கோட்டை அருகே பழனிவலசையை சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் முனியசாமி 28. தமிழர் தேசம் கட்சியின் தகவல் தொழில் நுட்ப மாநில துணைச் செயலாளராக உள்ளார். இவரையும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோரை ஆக.,ல் கொலை செய்ய முயன்ற மதுரை குத்துக்கல்வலசையை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன் 20, மதுரை மேலவளவு வெள்ளி மகன் பெரியகருப்பன் என்ற ராசு 21, மதுரை முப்படைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடலாடி அருகே எஸ்.மாரியூர் சுனாமி தெரு ஜெகநாதன் மகன் மாந்தோப்பு லோகேஷ் 26, கீழக்கரை அருகே கும்பிடு மதுரை பாலகிருஷ்ணன் மகன் கிேஷார் 24, ஆகிய இருவரையும் ராமநாதபுரம் போலீசார் தேடி வந்தனர். ராமநாதபுரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கிேஷாரை சில தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். லோகேைஷ தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் ரம்பேசோடவரம் அருகே காந்திநகர் பகுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் லோகேைஷ ஆந்திரா போலீசார் கைது செய்து ராஜமுந்திரி ஜெயிலில் அடைத்த விபரம் தெரிய வந்தது. இதையடுத்து லோகேைஷ ராமநாதபுரம் போலீசார் அங்கு கைது செய்தனர்.ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் ஆஜர் செய்தனர். அவரை மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் செப்.24 வரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து லோகேைஷ போலீசார் ராஜமுந்திரி ஜெயிலில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை