உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: விபத்து அபாயம்

திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: விபத்து அபாயம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சிக்குட்பட்ட கண்ணன் கோயில் அருகே ஆபத்தான நிலையில் மூடப்படாமல் உள்ள கழிவுநீர் கால்வாயால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.முதுகுளத்துார் கண்ணன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் வசதி உள்ளது. கால்வாய் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஆபத்தான நிலையில் இருந்த போது பெரிய கற்களால் மூடி வைக்கப்பட்டிருந்தது. கல் உடைந்து கால்வாய் ஆபத்தான நிலையில் உள்ளது. முதுகுளத்துாரில் இருந்து கடலாடி, கமுதி செல்லும் முக்கியமான ரோடு என்பதால் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும்போது ரோட்டோரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கால்வாயால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே கண்ணன் கோயில் அருகில் திறந்துகிடக்கும் கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ