உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. விவசாயப் பணிகள் முடிந்து தற்போது அறுவடை நடக்கிறது. தாலுகாவில் சின்னக்கீரமங்கலம், வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை ஆகிய 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சன்னரகம் குவிண்டாலுக்கு ரூ.2450, பொது ரகம் ரூ.2405க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று திருவெற்றியூரில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ