நிலங்களை அளவீடு செய்வதற்கு மக்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் : பொதுமக்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதற்கு தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்த நிலையில் தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இப்புதிய சேவையின் மூலம் மக்கள் நில அளவை செய்ய எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்கலாம். இச்சேவை அனைத்து இ--சேவை மையங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு எஸ்.எம்.எஸ்., அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். நில அளவை செய்த பின்னர்மனுதாரர், நில அளவர்கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு மனுதாரர்https://eservices.tn.gov.inஎன்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.