அடிப்படை வசதி செய்து தர மக்கள் கோரிக்கை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பேராவூர் வடக்கு யாதவர் தெரு மக்கள் அடிப்படை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.வடக்கு யாதவர் தெருவில் அடிப்படை வசதியான ரோடு, தெருவிளக்குகள், போதிய குடிநீர் வசதியின்றி சிரமப்படுகிறோம். இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.எனவே வடக்கு யாதவர் தெருவில் பேவர் பிளாக் ரோடு மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.