உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போக்சோ விழிப்புணர்வு

போக்சோ விழிப்புணர்வு

தொண்டி: தொண்டியில் த.மு.மு.க., மகளிர் பேரவை சார்பில் போக்சோ விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. செரிபா ஜெயினுலாப்தீன் தலைமை வகித்தார். ஆலிமா முத்து நாச்சியா வரவேற்றார். பேரூராட்சி கவுன்சிலர் சமிமா பானு உட்பட பலர் கலந்து கொண்டனர். நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கைகளில் உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால் தான் குடும்பமும், சமூகமும் நிம்மதியாக இருக்க முடியும். போக்சோ சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், பல வழக்குகள் வெளியுலகிற்கு வராமல் போகின்றன. குழந்தைகள் பாதுகாப்பாக வளர்க்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !