மேலும் செய்திகள்
பெண் டாக்டருக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி
19-Aug-2024
பரமக்குடி: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும்பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இமானுவேல் சேகரன் 67வது நினைவு நாள் நேற்று காலை 7:45 மணிக்கு துவங்கி நடந்தது. அவரது மகள் சுந்தரி பிரபாராணி, பேரன்கள் ரமேஷ்குமார், சக்கரவர்த்தி, கோமகன், சந்திரசேகர், வின்சென்ட் பிரபாகர், பேத்தி சுந்தரி உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இமானுவேல் சேகரன் பிறந்த ஊரான செல்லுார் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். பரமக்குடி தேவேந்திரர்பண்பாட்டு கழக செயலாளர் புண்ணியமூர்த்தி, பொருளாளர் முருகேசன், வசந்தபுரம் தேவேந்திர வேளாளர் சங்கம் சுதாகர் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் எம்.பி., தர்மர் அஞ்சலி செலுத்தினர். தமிழர் அதிகாரம் மாநிலத் தலைவர் அழகர்சாமி பாண்டியன்,கடலாடி வட்டார தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற நல சங்க செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆலங்குளம் மூர்த்தி, லாந்தை ஊராட்சி தலைவர் கவிதா, ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் கனிப்பிரியா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
19-Aug-2024