உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மணல் கொள்ளையை தடுக்க ஆர்ப்பாட்டம்

மணல் கொள்ளையை தடுக்க ஆர்ப்பாட்டம்

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆறு தரைப்பாலம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மயில்வாகனன், சிவாஜி முன்னிலை வகித்தனர்.பரமக்குடி வைகை ஆற்றில் தொடர் மணல் கொள்ளையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பரமக்குடியில் ஆட்டோ தொழிலாளர்களை தாக்கிய மணல் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும். ஆற்று படித்துறைகளில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார செயலாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை