உள்ளூர் செய்திகள்

ராமேஸ்வரத்தில் மழை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்ததால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.ராமேஸ்வரத்தில் நேற்று காலையில் பெய்த கனமழை அரைமணி நேரம் நீடித்தது. இதனால் கோயில் ரதவீதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டனர். மேலும் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பும், பஸ் ஸ்டாண்ட் அருகிலும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மழையால் ராமேஸ்வரம் பகுதியில் வெப்ப சலனம் நீங்கி குளுகுளு என மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை