மேலும் செய்திகள்
நாட்டுப்படகு மீனவர்கள் 33 பேர் கைது
09-Aug-2024
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
28-Aug-2024
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன் பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் சில மீனவர்கள் வெறும் படகுகளுடன் கரை திரும்பினர்.ஆக.,31ல் ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு இரண்டு கப்பல்களில் ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.இதனால் பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை படகில் இழுத்து வைத்து கொண்டு படகுகளுடன் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பின்னர் இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்தனர். ஆனால் பெரும்பாலான படகுகளில் எதிர்பார்த்த மீன்வரத்து கிடைக்கவில்லை. சிலர் வெறும் படகுகளுடன் ராமேஸ்வரம் கரை திரும்பினர்.இலங்கை கடற்படை வீரர்களின் கெடுபிடியால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து கடன் தொல்லையில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
09-Aug-2024
28-Aug-2024