உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், பிப்., 24 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். பிப்., 28ல் தங்கச்சி மடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இரண்டாம் நாளான நேற்று மீனவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் புதுக்கோட்டை, நாகை மாவட்ட மீனவர்கள் பலர் பங்கேற்றனர். அ.தி.மு.க., மாவட்ட செயலர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி, தாய் தமிழர் கட்சியைச் சேர்ந்த 37 பேர் நேற்று ராமேஸ்வரம் கோவில் அக்னிதீர்த்தக் கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர். அனுமதி இன்றி போராட்டம் நடத்த முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ