மண்டல அளவில் கராத்தே போட்டி
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் முகமது சதக் கபீர் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி, மதுரை சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளியும் இணைந்து நடத்திய மண்டல அளவிலான கராத்தே போட்டி முகமது சதக் கபீர் பள்ளியில் நடந்தது.இதில் 12, 14, 17, 19 வயது பிரிவுகளில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் பரிசு வழங்கினார்.முகமது சதக் பள்ளி முதல்வர் ஆலியா, எம்.ஜி., பப்ளிக் பள்ளி துணை முதல்வர் ராதா, உடற்கல்வி ஆசிரியர் திலீப்ராஜ், கராத்தே மாஸ்டர் கண்ணன் பங்கேற்றனர்.