உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்டல அளவிலான  விளையாட்டு போட்டி

மண்டல அளவிலான  விளையாட்டு போட்டி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பள்ளி கல்வித்துறை, இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் மதுரை மண்டல அளவிலான ேஹண்ட் பால், டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா போட்டிகளை துவக்கி வைத்தார். 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக ேஹண்ட்பால், டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் அணியினர் மாநில அணியில் விளையாட தகுதி பெறுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ