உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.5.60 லட்சம்: உதவி கோட்ட பொறியாளர் மீது வழக்கு

ரூ.5.60 லட்சம்: உதவி கோட்ட பொறியாளர் மீது வழக்கு

ராமநாதபுரம்; ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டப் பொறியளாளர் (தரக்கட்டுப்பாடு) அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி கோட்டப்பொறியாளர் ரெங்கபாண்டி, தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஜெயசக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் உத்தரவின்படி நேற்றுமுன்தினம் போலீசார் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.உதவி கோட்டப்பொறியாளர் ரெங்கபாண்டி 46, தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஜெயசக்கரவர்த்தி 39, மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.மதுரை எஸ்.வி.பி., நகரில் உள்ள ரெங்கபாண்டி வீட்டிலும் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். உதவி கோட்டப்பொறியாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ